செய்திகள்
கோப்புப்படம்

குமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2020-11-24 07:58 GMT   |   Update On 2020-11-24 07:58 GMT
சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதுபோல மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கடல் சீற்றம் மற்றும் தொடர்மழை காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையில் நிவர் புயல் காரணமாக கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதை தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் 350 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதுபோல மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

அவர்களின் விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுக கடல் பகுதியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தின் பிற கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்களின் கட்டு மரங்கள், வள்ளங்கள் அனைத்தும் அந்தந்த பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News