சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
நிவர் புயல்: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை
பதிவு: நவம்பர் 24, 2020 07:39
மழை
சென்னை:
நிவர் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 470 கிலோமீட்டர், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை
கொண்டுள்ளது. மேலும் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது.
தீவிர புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது 100கி.மீட்டர் முதல் 110கி.மீட்டர் வேகத்திலும் அல்லது 120 கி.மீட்டர் வேகத்திலும் கரையை
கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய
விடிய கனமழை பெய்து வருகிறது.
முன்னதாக நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 24-ந் தேதி (இன்று) இடியுடன் கூடிய அதிக கனமழை
பெய்யும்.என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்
மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல்
மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :