செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

Published On 2020-11-17 06:56 GMT   |   Update On 2020-11-17 06:56 GMT
மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து 2562 கன அடி அதிகரித்து விநாடிக்கு 10,392 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

கர்நாடக மாநிலம் கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6477 கன அடி தண்ணீரும், நேற்று 7770 கன அடி தண்ணீரும் மேட்டூர் அணைக்கு வந்தது. இன்று நீர்வரத்து 2562 கன அடி அதிகரித்து விநாடிக்கு 10392 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து மேற்கு, கிழக்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 94.83 அடியாக உள்ளது.
Tags:    

Similar News