மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு - விண்ணப்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன?
பதிவு: நவம்பர் 04, 2020 20:37
கோப்புப் படம்
சென்னை:
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில், “6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்கள் வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை தர வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களை கையெப்பம் பெற்றுவர அலைக்கழிக்ககூடாது. மாணவர்கள் நலன்கருதி கால தாமதமின்றி படிப்பு சான்று வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :