செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு

Published On 2020-10-30 02:06 GMT   |   Update On 2020-10-30 02:06 GMT
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிதாக 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் 16 நாட்களாக குறைந்திருந்த தொற்று சற்று உயர்ந்துள்ளது.
சென்னை:

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருவது போல தமிழகத்திலும் பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 16 நாட்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது. எனினும் இந்த எண்ணிக்கை நேற்று சற்று அதிகரித்துள்ளது.

அந்தவகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 73 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,595 ஆண்கள், 1,057 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 95 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 370 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் நேற்று புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 756 பேரும், கோவையில் 251 பேரும், சேலத்தில் 170 பேரும், குறைந்தபட்சமாக திண்டுக்கலில் 5 பேரும், பெரம்பலூரில் இருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை, ஈரோடு, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து இருக்கிறது. இந்த மாவட்டங்கள் அனைத்திலும் 100-க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் 19 பேர், தனியார் மருத்துவமனைகளில் 16 பேர் என 35 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 11 ஆயிரத்து 53 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 87 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சையில் 24 ஆயிரத்து 886 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News