செய்திகள்
மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கலெக்டர்

1035வது சதயவிழா- மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு கலெக்டர் மரியாதை

Published On 2020-10-26 02:14 GMT   |   Update On 2020-10-26 02:14 GMT
தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி அவரது சிலைக்கு அம்மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சாவூர்:

தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சதயவிழா நடைபெறுமா? என கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில் சதயவிழாவை ஒருநாள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சதய விழாவில் கொரோனா தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா இன்று நடைபெறுகிறது.

தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி அவரது சிலைக்கு  கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News