செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது

Published On 2020-10-24 07:20 GMT   |   Update On 2020-10-24 07:20 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37 ஆயிரத்து 600-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த 17-ந் தேதி தங்கம் பவுன் ரூ.38 ஆயிரத்துக்குள் வந்தது. அன்று 37 ஆயிரத்து 440-க்கு விற்று வந்த நிலையில், தொடர்ந்து விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் குறைவு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37 ஆயிரத்து 600-க்கு விற்கிறது.

கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4,700 ஆக உள்ளது. தங்கத்தை போல வெள்ளி விலையிலும் குறைவு காணப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.67 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்கிறது.
Tags:    

Similar News