செய்திகள்
விபத்து

திருச்செங்கோடு அருகே விபத்தில் தேமுதிக பிரமுகர், மாமனார் பலி

Published On 2020-10-22 03:56 GMT   |   Update On 2020-10-22 03:56 GMT
திருச்செங்கோடு அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் தேமுதிக பிரமுகர் மற்றும் அவரது மாமனார் உயிரிழந்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் தேமுதிக பிரமுகர் மற்றும் அவரது மாமனார் உயிரிழந்தனர்.

2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் விஜய் கமல் விபத்தில் பலியானார்.

தோக்கவாடியில் நிகழ்ந்த இந்த விபத்தில் விஜய் கமலின் மாமனார் ரங்கநாதனும் இறந்த நிலையில் குடும்பத்தினர் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News