செய்திகள்
கர்ப்பிணி

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 6 மாதங்களில் 1,449 பிரசவம்- டீன் தகவல்

Published On 2020-10-06 03:04 GMT   |   Update On 2020-10-06 03:04 GMT
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 6 மாதங்களில் 1,449 பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாக டீன் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்தார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று உள்ளவர்கள், தொற்று இல்லாதவர்கள், தொற்று நிலை தெரியாதவர்கள் என 3 பிரிவினருக்கும் பிரத்யோக பிரசவ அறை மற்றும் அறுவை அரங்கு தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 6 மாதங்களில் 1,449 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அவற்றில் 170 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று இருந்தது. எனினும் அவர்களுக்கு சிறந்த முறையில் பிரசவம் பார்க்கப்பட்டது. கடந்த 6 மாதங்களில் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்த 618 தாய்மார்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

கருப்பையில் கட்டியுடன் கருத்தரித்து சிக்கலான நிலையில் அனுப்பப்பட்ட தாய்மார்களுக்கு உயிர்காக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. பிற ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று சிக்கலுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 10 தாய்மார்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News