செய்திகள்
முத்தரசன்

சசிகலா விடுதலையானாலும் அரசியலில் மாற்றம் இருக்காது- முத்தரசன்

Published On 2020-10-05 05:50 GMT   |   Update On 2020-10-05 05:50 GMT
சசிகலா விடுதலையானாலும் அரசியலில் மாற்றம் இருக்காது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவை போல இந்தியாவிலும் அனைத்து துறையும் தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு முனைப்புக்காட்டி வருகிறது. கோடிக்கணக்கான விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்து விடுவது போன்று தான் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது..

விவசாய விரோத சட்டங்கள் திரும்பப்பெறும் வரையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வருகிற 12-ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக, சட்டமன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட தேர்தல் கூட்டணி அணி அல்ல.

தமிழகத்தின் உரிமையை, மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட அணி. இந்த அணி பலமாக உள்ளது. தேர்தலை சந்திக்கும். அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து தொடர்ந்து பிரச்சினைகள் உள்ளன.

இது உட்கட்சி பிரச்சினைதான் என்றாலும் இவர்கள் பகிரங்கமாக மோதிக் கொள்வதால் நிர்வாகம் சீர் குலைந்து போய் நிற்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. பாபர் மசூதி வழக்கு தொடர்பான தீர்ப்பு ஏற்புடையதல்ல. நிராகரிக்கப்பட வேண்டிய தீர்ப்பு. இதில் எந்த நீதிமன்றம் பெரியது என்ற கேள்வி எழுகிறது.

தீர்ப்பு குறித்து சொல்லுகின்ற காரணம் என்னவெனில் நீதியின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை அவ நம்பிக்கையாக மாறி விட்டது. சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அரசியலில் மாற்றம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News