செய்திகள்
கனிமொழி

திமுக எம்.பி. கனிமொழி உள்பட 300 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2020-10-03 08:52 GMT   |   Update On 2020-10-03 08:52 GMT
தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியதாக திமுக எம்.பி. கனிமொழி உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தட்டார்மடம்:

தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் அக்.2-ல் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், கொரோனா பரவலின் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.  இந்த நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் மக்களை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நேற்று பல்வேறு இடங்களிலும் திமுக சார்பில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசூர் ஊராட்சி இடைச்சிவிளையில் நடத்தப்பட்ட பொதுமக்கள் சபை கூட்டத்தில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று மனுக்களைப் பெற்றனர்.

இதையடுத்து, அனுமதியின்றி கிராம சபைக்கூட்டம் நடத்தியதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், அரசூர் ஊராட்சி தலைவர் தினேஷ் ராஜசிங் மற்றும் சாத்தான்குளம் திமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட 300 பேர் மீது தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News