செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் 1,289 பேர், கோவையில் 550 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

Published On 2020-10-01 18:23 GMT   |   Update On 2020-10-01 18:23 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 688 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 683 பேர். 

விமான நிலைய கண்காணிப்பில் உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 2 நபருக்கும், சாலை மார்க்கமாக சொந்த ஊர் வந்தவர்களில் 3 நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 3 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 516 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை
9 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 34
செங்கல்பட்டு - 356
சென்னை - 1,289
கோவை - 550
கடலூர் - 180
தர்மபுரி - 79
திண்டுக்கல் - 43
ஈரோடு - 145
கள்ளக்குறிச்சி - 50
காஞ்சிபுரம் - 148
கன்னியாகுமரி - 118
கரூர் - 47
கிருஷ்ணகிரி - 87
மதுரை - 82
நாகை - 54
நாமக்கல் - 111
நீலகிரி - 72
பெரம்பலூர் - 23
புதுக்கோட்டை - 87
ராமநாதபுரம் - 9
ராணிப்பேட்டை - 89
சேலம் - 341
சிவகங்கை - 36
தென்காசி - 49
தஞ்சாவூர் - 232
தேனி - 65
திருப்பத்தூர் - 83
திருவள்ளூர் - 260
திருவண்ணாமலை - 88
திருவாரூர் - 123
தூத்துக்குடி - 75
திருநெல்வேலி - 86
திருப்பூர் - 192
திருச்சி - 89
வேலூர் - 149
விழுப்புரம் - 134
விருதுநகர் - 31
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 0
உள்நாடு - 2
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 5,688
Tags:    

Similar News