செய்திகள்
குழந்தை ஆதவனுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டிய போது எடுத்தபடம்.

ஒரத்தநாடு அருகே மாநிலங்களின் பெயரை சரளமாக ஒப்பிக்கும் 2¾ வயது குழந்தை

Published On 2020-10-01 14:09 GMT   |   Update On 2020-10-01 14:09 GMT
ஒரத்தநாடு அருகே மாநிலங்களின் பெயரை 2¾ வயது குழந்தை சரளமாக ஒப்பித்து, பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மபாலா. ஓட்டல் உரிமையாளர். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு அகரன் (10), ஆதவன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஆதவனுக்கு வயது 2 ஆண்டுகள் 9 மாதங்களே ஆகிறது. வழக்கமான சுட்டித்தனங்களுடன் விளையாடும் ஆதவன், இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் உள்பட 36 மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களின் பெயர்களை பிழையின்றி 48 விநாடிகளில் ஒப்பிக்கும் அழகு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மேலும் இந்தியாவின் தேசிய சின்னங்கள், தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை, ஆங்கில மாதங்கள், 16 வகை செல்வங்கள் போன்றவற்றையும் சரளமாக கூறுகிறான்.

ஆதவனின் திறமையை வீடியோவாகவும், ஆடியோவாகவும் பதிவு செய்த அவனது தந்தை தர்மபாலா, ‘ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்’ என்ற அமைப்புக்கு அனுப்பினார். இதையடுத்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் கென்னடி, ஆதவனின் வீட்டுக்கு சென்று பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி ஆதவனை பாராட்டினார். அப்போது புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

சிறு வயதிலேயே மாநிலங்கள், தேசிய சின்னங்களை நினைவு வைத்துக்கொண்டு சரளமாக ஒப்பிக்கும் ஆதவனை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். ஆதவனுக்கு வீட்டிலேயே அனைத்தையும் சொல்லி கொடுத்ததாக அவனது தாயார் முத்துலட்சுமி 
Tags:    

Similar News