செய்திகள்
சசிகலா

சசிகலா வருகைக்கு பின் அ.தி.மு.க.வில் ஒற்றுமை இருக்காது- இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி

Published On 2020-10-01 08:36 GMT   |   Update On 2020-10-01 08:36 GMT
முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் அ.தி.மு.க. வினர் லாப நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். சசிகலா வருகைக்கு பின் அ.தி.மு.க.வில் ஒற்றுமை இருக்காது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

பழனி:

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பழனியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தி தீர்ப்பை இந்து முன்னணி மனதார வரவேற்கிறது. கோவில்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். பழனி போன்ற முக்கிய கோவில்களில் திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை குறித்து உதயநிதி ஸ்டாலின் நாகரீகமாகவும், மரியாதையாகவும் பேச கற்றுக் கொள்ள வேண்டும்.

இதே போல் தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா அநாகரீகமாக பேசியது கண்டனத்துக்குரியது. ஆனால் தி.மு.க.வினர் இது போல் பேசுவது ஆச்சரியமானது அல்ல.

முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் அ.தி.மு.க. வினர் லாப நோக்கத்தில் தான் செயல்பட்டு வருகின்றனர். சசிகலா வருகை காரணமாகவே தற்போது அ.தி.மு.க.வில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சசிகலா வருகைக்கு பின் அ.தி.மு.க.வில் ஒற்றுமை இருக்காது. வருகிற 7-ந் தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News