செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு 6ஆயிரம் கனஅடியாக குறைப்பு

Published On 2020-09-30 06:07 GMT   |   Update On 2020-09-30 06:07 GMT
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு 6 ஆயிரம் கனஅடி மட்டுமே திறந்து விடப்படுகிறது. கால்வாயில் வழக்கம்போல் 850 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 5,145 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 6,063 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று காலை காவிரியில் 18ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 750 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

நேற்று மாலை காவிரியில் தண்ணீர் திறப்பு 10ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. பின்னர் நேற்றிரவு மீண்டும் காவிரியில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு 6 ஆயிரம் கனஅடி மட்டுமே திறந்து விடப்படுகிறது. கால்வாயில் வழக்கம்போல் 850 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 96.95 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 96.55 அடியாக சரிந்தது.
Tags:    

Similar News