செய்திகள்
ஒகேனக்கல்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2020-09-26 08:39 GMT   |   Update On 2020-09-26 08:39 GMT
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
பென்னாகரம்:

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, சாம்ராஜ் நகர், மண்டியா மற்றும் கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது.

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது அவ்வபோது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து கூடுவதும், சரிவதுமாக உள்ளது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினா டிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள் ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கர்நாடக -தமிழகம் எல் லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News