செய்திகள்
பா சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ

85வது பிறந்தநாள்- டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு

Published On 2020-09-24 08:50 GMT   |   Update On 2020-09-24 08:50 GMT
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 85-வது பிறந்தநாளையொட்டி மணிமண்படத்தில் உள்ள அவரது முழுஉருவசிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்செந்தூர்:

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 85-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்படத்தில் உள்ள அவரது முழுஉருவசிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 2 ஆயிரம் பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார்.

அவருடன் இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், நவீன்குமார், பாலசிங், மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி, வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தர்ராஜ், நகர பொறுப்பாளர்கள் வால்சுடலை, முருகப்பெருமாள் மற்றும் ஸ்ரீதர் ரெட்ரிகோ, இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தண்டுபத்து ஜெயராமனின் மகன்களும், சிதம்பரம் பில்டர்ஸ் உரிமையாளர்களுமான ரகுராமன், சிவராமன் மற்றும் திருச்செந்தூர் சாய்பாபா கோவில் நிறுவனர் செல்வமுருகன், தொழில் அதிபர் பாலசந்தர் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், நிர்வாகிகள் முத்துராஜ், மணி, பா.ஜ.க. மாநில வர்த்தக அணி தலைவர் ராஜ கண்ணன் தலைமையில் வர்த்தக அணி செயலாளர் சத்தியசீலன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட செயலாளர் சக்திவேல், நாம் இந்தியர் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயகணேஷ், நிர்வாகிகள் சரவணக்குமார், வேல்சாமி, இசக்கி ராஜா, சமத்துவ மக்கள் கழகம் மாநில துணை பொதுச்செயலாளர் காமராசு நாடார், ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், இணை செயலாளர் காமராஜ், நிர்வாகிகள் ஜெயபால், சக்திகுமார், ராஷ்ட்ரிய சேவா பாரதி அகில பாரத அமைப்பாளர் சுந்தர லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News