செய்திகள்
அமராவதி அணை

அமராவதி அணை நீர்மட்டம் 89 அடியை தாண்டியது- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2020-09-22 08:54 GMT   |   Update On 2020-09-22 08:54 GMT
அமராவதி அணை நீர்மட்டம் 89 அடியை தாண்டியதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென கரூர் மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
க. பரமத்தி:

அமராவதி அணை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும் இதன் மொத்த கொள்ளளவு 4047 மில்லியன் கன அடி ஆகும் இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர் கரூர் மாவட்டத்தில் சுமார் 54ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.

இதனால் இந்த பகுதிகளில் நெல் கரும்பு மஞ்சள் சரளமாக வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக பருவமழை தீவிரமடைந்து வருவதால் கேரள மாநிலம் மூனாறு மற்றும் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து தூவானம் பாம்பாறு தேனாறு சின்னாறு ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நேற்று இரவு 9மணிக்கு அணையின் நீர்மட்டம் 89.47 அடியாக தாண்டியது அணைக்கு வினாடிக்கு 3250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் இரவு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அதிக அளவு தண்ணீர் வந்தால் அணையின் நலன் கருதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படும். தற்போது அணையில் இருந்து 2 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரூர் மாவட்ட கரையோர மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி கரூர் மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News