செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-09-20 17:22 GMT   |   Update On 2020-09-20 17:22 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 516 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 206 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 811 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 213
செங்கல்பட்டு - 2,456
சென்னை - 9,706
கோவை - 4,364
கடலூர் - 2,315
தர்மபுரி - 1,033
திண்டுக்கல் - 587
ஈரோடு - 1,076
கள்ளக்குறிச்சி - 874
காஞ்சிபுரம் - 1,119
கன்னியாகுமரி - 637
கரூர் - 511
கிருஷ்ணகிரி - 794 
மதுரை - 710
நாகை - 999
நாமக்கல் - 999
நீலகிரி - 666
பெரம்பலூர் - 117
புதுக்கோட்டை - 868
ராமநாதபுரம் - 225
ராணிப்பேட்டை - 491
சேலம் - 2,327
சிவகங்கை - 277
தென்காசி - 600
தஞ்சாவூர் - 1,138
தேனி - 584
திருப்பத்தூர் - 608
திருவள்ளூர் - 1,697
திருவண்ணாமலை - 1,290
திருவாரூர் - 801
தூத்துக்குடி - 779
திருநெல்வேலி - 1,025
திருப்பூர் - 1,803
திருச்சி - 768
வேலூர் - 908
விழுப்புரம் - 988
விருதுநகர் - 302
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 4
உள்நாடு - 42
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 46,703
Tags:    

Similar News