செய்திகள்
பூ மார்க்கெட்

மழையினால் வியாபாரம் பாதிப்பு: பூ சந்தையை கோயம்பேட்டுக்கு மாற்ற வியாபாரிகள் கோரிக்கை

Published On 2020-09-19 09:55 GMT   |   Update On 2020-09-19 09:55 GMT
மழையினால் வியாபாரம் பாதிக்கப்படுவதால் வானகரத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பூ சந்தையை விரைவாக கோயம்பேட்டுக்கு மாற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:

கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக கோயம்பேட்டில் இயங்கி வந்த பூ சந்தை தற்காலிகமாக தற்போது வானகரத்தில் இயங்கி வருகிறது. தொடர் கனமழை காரணமாக வானகரத்தில் செயல்பட்டு வரும் இந்த தற்காலிக பூ சந்தைக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது.

நேற்று இரவு பெய்த கனமழையினால் பூ சந்தை முழுவதும் மழைநீர் தேங்கி நின்றதால் தற்போது மெல்ல மழைநீர் வடிந்த பின்னர் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. வாகனங்கள் வந்து செல்லும்போது கூட அதனை இயக்குவதற்கு சிரமமாக இருப்பதாக வியாபரிகளும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

மழையினால் வியாபாரம் பாதிக்கப்படுவதால் வரும் 28 ஆம் தேதி கோயம்பேட்டில் காய்கறி சந்தை திறக்கும்போதே பூ சந்தையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News