செய்திகள்
கொரோனா தொற்று எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் குவித்து வைக்கப்பட்டிருக்கும் காட்சி.

சாலையோரத்தில் அலட்சியமாக கிடக்கும் கொரோனா எதிர்ப்பு சத்து மாத்திரை தொகுப்புகள்- பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2020-09-19 08:04 GMT   |   Update On 2020-09-19 08:04 GMT
கோவையில் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வந்த கொரோனா நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்புகள் உரிய பாதுக்காப்பின்றி சாலை ஓரத்திலேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
கோவை:

கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் ஆங்காங்கே நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் மூலம் முகக்கவசம், வைட்டமின்-சி மாத்திரை, ஆர்சனிக் ஆல்பம், கபசுரக் குடிநீர் பொடி அடங்கிய தொகுப்புகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கோவை கரும்புக்கடை இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வந்த கொரோனா நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்புகள் உரிய பாதுக்காப்பின்றி சாலை ஓரத்திலேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வழங்கப்படும் தொகுப்புகள் அலட்சியமாக வெட்ட வெளியில் கிடப்பதால், திடீரென்று மழை பெய்தால் அவை நனைந்து வீணாக வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:- ரேஷன் கடைக்கு வெளியே சாலை ஓரத்திலேயே இந்த தொகுப்புகளை கொட்டி வைத்துள்ளதால் வாகனங்கள் கடந்து செல்லும் போது அதிலிருந்து கிளம்பும் மண் மற்றும் தூசி தொகுப்புகள் மீது விழுகிறது. மேலும் வெட்ட வெளியில் போடப்பட்டுள்ள அந்த கொரோனா தடுப்பு மாத்திரை தொகுப்புகளை இதுவரை இந்த பகுதி மக்களுக்கு வழங்கவில்லை. கொரோனாவை தடுக்க வழங்கப்படும் சத்து மாத்திரைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. மழையிலும், வெளியிலும் வீணாகும் அவற்றை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News