செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

Published On 2020-09-16 05:58 GMT   |   Update On 2020-09-16 05:58 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.39,560-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாகவே ஏற்றதாழ்வு காணப்பட்டு வருகிறது.

நேற்று பவுனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.39,680-க்கும், கிராம் ரூ.4,960-க்கும் விற்றது. இதனால் தங்கம் பவுனுக்கு மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டும் என்று கருதப்பட்டது.

ஆனால் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,560-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,945 ஆக உள்ளது.

அதே போல் வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.71 ஆயிரத்துக்கு விற்கிறது. ஒரு கிராம் ரூ.71 ஆக உள்ளது.
Tags:    

Similar News