செய்திகள்
ப.சிதம்பரம்

தேவை இழப்பீடு, ஆறுதல் வார்த்தைகள் அல்ல - ப.சிதம்பரம்

Published On 2020-09-10 12:31 GMT   |   Update On 2020-09-10 12:49 GMT
ஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகள் கடன் வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டால் ஏற்கனவே துண்டாடப்பட்டுள்ள மாநிலங்களின் மூலதன செலவில் மேலும் துண்டு விழும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ஜிஎஸ்டி விவகாரத்தில், மாநில அரசுகள் கடன் வாங்க  நிர்பந்திக்கப்பட்டால் ஏற்கனவே துண்டாடப்பட்டுள்ள  மாநிலங்களின் மூலதன செலவில்  மேலும் துண்டு விழும் என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய பொருளாதார சூழலில் ஜிஎஸ்டி இழப்பீடு என்பது மாநிலங்களுக்கு  உடனடியாக தேவைப்படும் நிதி. மத்திய அரசு அதற்கான நிதியை திரட்டவும், அதனை வழங்கவும் வேறு பல வளங்களைப் பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்,

இதுகுறித்து மத்திய அரசு வெளியிடும் திட்டங்களும் அறிவிப்புகளும் எந்த மதிப்பும் இல்லாத ஆறுதலான வார்த்தைகளாகவே உள்ளது.

மேலும் ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அளிக்கப்பட்ட ரூ. 500 மூலம் இன்றுள்ள நிலையில் குடும்பத்தை நடத்த முடியுமா? என மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News