செய்திகள்
எச் ராஜா

எல்லை மீறி பேசினால் கூட்டணிக்குள் பிரச்சினை ஏற்படும்- அமைச்சருக்கு எச்.ராஜா கண்டனம்

Published On 2020-08-31 08:44 GMT   |   Update On 2020-08-31 08:44 GMT
தமிழக அரசை விமர்சிப்பது கிடையாது என்றும் தோழமை சுட்டுதலோடு குறைகளை சொல்வதாகவும் எச்.ராஜா தெரிவித்தார்.
மதுரை:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கர்நாடக அரசு விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கியதை சுட்டிக்காட்டி,  பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா ட்வீட் செய்திருந்தார். அதில் ‘கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என்று எழுதியிருந்தார்.

இது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. தமிழக அரசை ஆண்மையற்ற அரசாக கூறியதாக எச்.ராஜாவை சமூக வலைதளங்களில் அதிமுகவினர் விமர்சித்தவண்ணம் உள்ளனர். அமைச்சர்களும் எச்.ராஜாவை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக மீதான தமிழக அமைச்சர்களின் விமர்சனம் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசியதாவது:-

அதிமுக எல்லை மீறி பேசுவது கூட்டணிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். அமைச்சர்கள் ஜெயக்குமாரும், செல்லூர் ராஜூவும் பேசுவது சரியல்ல. தமிழக அரசை நான் விமர்சிப்பது கிடையாது, தோழமை சுட்டுதலோடு குறைகளை மட்டுமே சொல்கிறேன்.

பாஜக இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது. நாடு முழுவதும் இருப்பதைப் போல் தமிழகத்திலும் பாஜக தேர்தல் நடவடிக்கை இருக்கும். நிதியமைச்சர் நிர்மலாவை விமர்சித்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மன்னிப்பு கேட்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News