செய்திகள்
முக ஸ்டாலின்

நீட் தேர்வு: சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் அமைச்சரின் கடிதத்தையா மதிக்கப்போகிறார்கள் - ஸ்டாலின் டுவிட்

Published On 2020-08-26 18:56 GMT   |   Update On 2020-08-26 18:56 GMT
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம் எழுதியுள்ள நிலையில் தமிழக சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் அமைச்சரின் கடிதத்தையா மதிக்கப்போகிறார்கள் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: 

ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், திட்டமிட்ட தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

இந்த முடிவை எதிர்த்து ஜேஇஇ, நீட் தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி மகாராஷ்டிரா, மேற்குவங்காளம், பஞ்சாப், ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி ஆகிய 7 மாநில அரசுகள்
உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர முடிவு செய்துள்ளன.

இதற்கிடையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதியுள்ள கடிதம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

’நீட் எதிர்ப்பு உண்மையெனில் 7 மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றேன்! 

கடிதம் எழுதி இருக்கிறாராம் விஜயபாஸ்கர்

சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் இவரின் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள்?

ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.

நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.

அதற்கான முயற்சியை எடுத்த சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவி்ததுக் கொள்கிறேன்.

நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்!’

என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News