செய்திகள்
புழல் சிறையில் கொரோனா சிறப்பு வார்டை அமைச்சர்கள் திறந்து வைத்தபோது எடுத்த படம்.

புழல் சிறையில் கொரோனா சிறப்பு வார்டு- அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

Published On 2020-08-15 13:57 GMT   |   Update On 2020-08-15 13:57 GMT
புழல் சிறையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
சென்னை:

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி இன்று 15.08.2020 புழல், மத்திய சிறை சாலையில் கோவிட் பராமரிப்பு மையம் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைசாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ஆகியோரால் தொடங்கி
வைக்கப்பட்டது.

கொரோனா சிகிச்சைக்காக தமிழ்நாட்டில் இதுவரை புதிதாக 1,29,122 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்காக தமிழ்நாட்டில் 1643 கோவிட் பராமரிப்பு மையங்கள் (Covid Care Centre) செயல்படுகின்றன. (சென்னையில் 54 கோவிட் பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன). தமிழ்நாட்டில் உள்ள கோவிட் பராமரிப்பு மையங்களில் 72,640 படுக்கை வசதிகள் உள்ளன. (சென்னை கோவிட் பராமரிப்பு மையங்களில் 15,932 படுக்கை வசதிகள் உள்ளன). புழல் சிறை வளாகத்தில் 3 சிறைகளில் 2014 சிறை கைதிகள் உள்ளனர். புழல் மத்திய சிறை மற்றும் அதன்கட்டுப்பாட்டிலுள்ள கிளைச்சிறைகள் (செங்கல்பட்டு, பூந்தமல்லி, பொன்னேரி, மதுராந்தகம், திருத்தணி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சைதாப்பேட்டை) கைதிகளுக்கு ஏற்படும் உடல் நல குறைபாடுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையான அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 114 சிறை கைதிகள் அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 99 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக புழல் சிறை வளாகத்தில் 50 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் பராமரிப்பு மையம் (Covid Care Centre) இன்று தொடங்கப்படுகிறது. இம்மையத்தில் உள்ள வசதிகள் 4 வார்டுகள் (3 ஆண்கள் பிரிவு + 1 பெண்கள் பிரிவு). 50 படுக்கை வசதிகள், ஆய்வகம் (RTPCR பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது), மருந்தகம் 108 ஆம்புலன்ஸ், செமி ஆட்டோ அனலைசர், நடமாடும் எக்ஸ்-ரே கருவி, இ.சி.ஜி.அல்ட்ரா சவுண்டு, ஆக்சிஜன் சிலிண்டர்ஸ், 3 சுழற்சி முறையில் (24X7) மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணிபுரிவார்கள்.

இந்நிகழ்வில் காவல்துறை இயக்குநர்/ தலைமை இயக்குநர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் திரு.சுனில் குமார் சிங், இ.கா.ப., சென்னை சரக சிறைத்துறைத் துணைத்தலைவர் மற்றும் சிறைத்துறை துணைத்தலைவர்
(தலைமையிடம்)(பொ), திரு.ஆ.முருகேசன், புழல் மத்திய சிறை-1(தண்டனை), சிறைக்கண்காணிப்பாளர் திரு.மா.செந்தில்குமார், புழல் மத்திய சிறை-2(விசாரணை), சிறைக்கண்காணிப்பாளர் திரு.கோ.பா.செந்தாமரைக்கண்ணன், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர்.நாராயணபாபு, அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.பாலாஜி, நகர்நல அலுவலர் டாக்டர்.ஜெகதீசன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News