செய்திகள்
பிளாஸ்மா தானம் செய்யும் காவலர்

சென்னையில் பிளாஸ்மா தானம் செய்த 40 போலீஸ்காரர்கள்

Published On 2020-08-13 09:00 GMT   |   Update On 2020-08-13 09:00 GMT
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 40 போலீஸ்காரர்கள் இன்று பிளாஸ்மா தானம் செய்தார்கள்.
கொரோனா வைரஸ்க்கு சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. என்றாலும் சித்த மருத்துவம், பிளாஸ்மா தானம் அதிக அளவில் பயன் அளித்துள்ளதால் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களால் பிளாஸ்மா தானம் வழங்க முடியும். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முன்கள பணியாளர்களில் போலீசாரின் பணி இன்றியமையாதது. பணியின்போது அவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் போலீசார், போலீஸ் அதிகாரிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்துள்ளனர்.



சென்னையில் குணடைந்த 40 போலீசார் சென்டிரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று சென்னை போலீஸ் கமிஷனர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் முன்னிலையில் பிளாஸ்மா தானம் செய்தனர்.

‘‘கொரோனாவில் இருந்து குணமடைந்த போலீசார் பலர் பிளாஸ்மா தானம் செய்த தயாராக இருக்கிறார்கள்’’ என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
Tags:    

Similar News