செய்திகள்
விவசாயிகள் இடுப்பில் மட்டும் இலைகளை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இலைகளை அணிந்து விவசாயிகள் நூதன போராட்டம்

Published On 2020-08-10 23:06 GMT   |   Update On 2020-08-10 23:06 GMT
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் இடுப்பில் இலைகளை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.







திருச்சி:

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் இடுப்பில் மட்டும் இலைகளை கட்டிக்கொண்டு வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கையில் சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளையும் வைத்து இருந்தனர். 

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யவேண்டும். அகில இந்திய பிற்பட்ட மக்கள் கணக்கெடுப்பை நடத்தி அதில் டி.என்.டி. பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாண கோலத்தில் அவர்கள் நடத்திய இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்காததால் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து நீண்ட நேரம் கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமாரிடம் அவர்கள் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News