செய்திகள்
நீர் அளவிடும் இடத்தில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது

கேரளா, கர்நாடகா பகுதிகளில் பலத்த மழை- ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2020-08-09 13:25 GMT   |   Update On 2020-08-09 13:25 GMT
கேரள, கர்நாடக மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி:

கேரள, கர்நாடக மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து, 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பிலிகுண்டுலுவில், நீர் அளவிடும் இடத்தில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த வெள்ளப்பெருக்கால், பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்கிறது. குறிப்பாக பிரதான அருவி தண்ணீரில் மூழ்கியும், சுமார் 100 அடி ஆழமுள்ள ஐந்தருவி பகுதி தண்ணீரில் மூழ்கியும் சமமாக செல்கின்றன. இதனிடையே கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News