செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் 989 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

Published On 2020-08-09 13:12 GMT   |   Update On 2020-08-09 13:12 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 994 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 974 பேர். 

விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 7 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 7 பேர் ஆவர்.

மேலும், சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 6 பேர் ஆகும்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 6 ஆயிரத்து 20 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 46
செங்கல்பட்டு - 397
சென்னை - 989
கோவை - 217
கடலூர் - 146
தர்மபுரி - 29
திண்டுக்கல் - 131
ஈரோடு - 66
கள்ளக்குறிச்சி - 86
காஞ்சிபுரம் - 393
கன்னியாகுமரி - 127
கரூர் - 32
கிருஷ்ணகிரி - 60
மதுரை - 107
நாகை - 69
நாமக்கல் - 35
நீலகிரி - 10
பெரம்பலூர் - 32
புதுக்கோட்டை - 139
ராமநாதபுரம் - 60
ராணிப்பேட்டை - 219
சேலம் - 165
சிவகங்கை - 50
தென்காசி - 173
தஞ்சாவூர் - 155
தேனி - 360
திருப்பத்தூர் - 58
திருவள்ளூர் - 396
திருவண்ணாமலை - 222
திருவாரூர் - 51
தூத்துக்குடி - 251
திருநெல்வேலி - 162
திருப்பூர் - 42
திருச்சி - 96
வேலூர் - 149
விழுப்புரம் - 67
விருதுநகர் - 193
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 7
உள்நாடு - 7
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 5,994
Tags:    

Similar News