செய்திகள்
வடபழனி காவல்நிலையம்

சென்னையில் மாயமான 118 சவரன் நகை- பெங்களூருவில் நகையுடன் சிக்கிய கடை ஊழியர்

Published On 2020-08-03 13:46 GMT   |   Update On 2020-08-03 13:46 GMT
சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் திருடப்பட்ட 118 சவரன் தங்க நகைகள் பெங்களூர் விமான நிலையத்தில் சிக்கியுள்ளன.
சென்னை:

சென்னை வடபழனியில் தங்க நகை பட்டறை வைத்திருக்கும் சுலா தேஷ் குமார், தனது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தில் இருந்து உறவினரான ஆசிஸ் யூர் ரஹ்மானை தொழிலுக்கு உதவியாக அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நகை பட்டறையில் இருந்து 118 சவரன் தங்க நகைகளை திருடிகொண்டு ஆசிஸ் திடீரென மாயமானார். இதுகுறித்து மேற்கு வங்காளத்தில் உள்ள தன் உறவினர்களிடம் தெரிவித்த சுலாதேஷ்குமார், நகையை மீட்டு தருவதாக உறவினர்கள் அளித்த உத்தரவாத‌த்தின் படி வழக்கு தொடராமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் ஆசிஸை பிடித்த சுங்க இலாகா அதிகாரிகள், சுலாதேஷ்குமாரிடம் தகவல் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து சுலாதேஷ்குமார் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, ஊரடங்கிற்கு மத்தியில், தமிழகத்தில் இருந்து பெங்களூரு வந்த‌து எப்படி, விமானத்தில் செல்வதற்கான ஆவணங்களை தாயார் செய்த‌து எப்படி போன்ற சுங்க இலாகா அதிகாரிகளின் கேள்விக்கு ஆசிஸ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Tags:    

Similar News