செய்திகள்
கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை, தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காட்சி.

தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம்- 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

Published On 2020-08-03 13:34 GMT   |   Update On 2020-08-03 13:34 GMT
கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை, தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம் தொடர்பாக, 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியருக்கும், நகராட்சி நிர்வாக ஆணையருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேனி:

தேனியில், கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை, தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம் தொடர்பாக, 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியருக்கும், நகராட்சி நிர்வாக ஆணையருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேனியில், கடந்த 31ஆம் தேதி கொரோனா தொற்றால், 45 வயது பெண் உயிரிழந்தார். உடனடியாக கூடலூர் நகராட்சி சுகாதார பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 12 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் அவரது மகன், தள்ளுவண்டியில் சடலத்தை எடுத்து சென்று தகனம் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து தாமாக முன் வந்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், 4 வாரத்தில் அறிக்கை  தாக்கல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியருக்கும், நகராட்சி நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News