செய்திகள்
டிரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

கொரோனா பரவலை தடுக்க டிரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

Published On 2020-07-15 11:23 GMT   |   Update On 2020-07-15 11:23 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ள 54 பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிரோன் கேமராக்களில் ஒலிபெருக்கி பொருத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை:

மதுரை நகரில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம், கூட்டமாக செல்வது தான். இதனை தடுக்கும் வகையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அதன்படி டிரோன் கேமராவில் ஒலிபெருக்கி பொருத்தி அதன் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ள 54 பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிரோன் கேமராக்களில் ஒலிபெருக்கி பொருத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News