செய்திகள்
கலெக்டர் சிவன்அருள்

தேவையின்றி வெளிமாவட்ட பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்- கலெக்டர் வலியுறுத்தல்

Published On 2020-07-07 14:57 GMT   |   Update On 2020-07-07 14:57 GMT
திருப்பத்தூர் மாவட்ட மக்கள் தேவையற்ற வெளிமாவட்ட பயணங்களை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சிவன்அருள் வலியுறுத்தி வருகிறார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட மக்கள் தேவையற்ற வெளிமாவட்ட பயணங்களை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சிவன்அருள் வலியுறுத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வருகை தரும் மக்கள் விடுபடாமல் முழுமையாக கண்காணிக்கப்பட்டு பரிசோதனைக்குப் பின் தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

ஊரடங்கு நாட்களில் அண்டை மாவட்டங்களுக்கு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காகவும், மருத்துவச் சிகிச்சைக்காகவும் சென்று வருகின்றனர். அண்டை மாவட்டங்களில் கொரோனா தொற்று கடந்தசில நாட்களாக வேகமாக பரவுகிறது.

இதனால் அண்டை மாவட்டங்களுக்கு முறையான அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் விழிப்புணர்வு இன்றி சென்று வரும் பொதுமக்களுக்கு தொற்று அறிகுறி கண்டறியப்படுவது சில நாட்களாக மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.

எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்ளுக்கு சென்று வரும் வியாபாரிகள், வணிகர்கள், தொழில் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தொற்று பரவல் குறையும் வரையிலும், அரசின் முழு ஊரடங்கு தளர்வு கிடைக்கும் நாட்கள் வரையிலும் வெளிமாவட்டங்களுக்கு தேவையின்றி சென்று வருவதைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News