செய்திகள்
டால்பின்கள்

பாம்பன் கடலில் துள்ளிக்குதித்து விளையாடிய டால்பின்கள்

Published On 2020-07-02 08:32 GMT   |   Update On 2020-07-02 08:32 GMT
பாம்பன் ரெயில் பாலம் அருகே உள்ள வடக்கு கடல் பகுதியில் காலை நேரத்தில் 5 டால்பின்கள் நீந்தியபடி துள்ளிக்குதித்து விளையாடின.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் முதல் மண்டபம் இடைப்பட்ட கடல் பகுதியில் ஏராளமான டால்பின்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலம் அருகே உள்ள வடக்கு கடல் பகுதியில் நேற்று காலை 10 மணியளவில் 5 டால்பின்கள் நீந்தியபடி துள்ளிக்குதித்து விளையாடின.

சிறிது நேரத்தில் தூக்குப்பாலம் கடல் பகுதியை கடந்து தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு டால்பின்கள் வேகமாக நீந்தி வந்தன. பின்னர் துள்ளிக்குதித்து விளையாடின.

இது பற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பன் கடல் பகுதியில் டால்பின்களை கூட்டமாகத்தான் காணமுடியும். தனியாக பார்க்க முடியாது. அரிய வகை கடல் வாழ் உயிரினமாக உள்ளதால் டால்பின்களை பிடிக்கவோ, வேட்டையாடவோ தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டால்பின்கள் வேட்டையாடினால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News