செய்திகள்
யோகா

கொரோனா நோயாளிகளுக்கு யோகாசனம்

Published On 2020-06-26 09:37 GMT   |   Update On 2020-06-26 09:37 GMT
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு யோகாசனம் கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மன உளைச்சல் அடையாமல் இருப்பதற்காக மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதவிர வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலம் வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே இந்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 7 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து டீன் பாலாஜி நாதன் கூறும்போது, ‘சேலம் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 502 பேர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் இதுவரை 335 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்துக்காக தினமும் ஒவ்வொரு யோகாசனம் கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் மன உளைச்சல் அடையாமல் இருப்பதற்காக மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்தும், பாதிக்கப்பட்டால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சுழற்சி முறையில் டாக்டர்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்’ என்றார்.

Tags:    

Similar News