செய்திகள்
கர்ப்பிணி

கடந்த மாதத்தில் மட்டும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 1,080 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்

Published On 2020-06-26 09:31 GMT   |   Update On 2020-06-26 09:31 GMT
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதத்தில் மட்டும் 1,080 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்துள்ளது. அதில் 477 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவமும், மீதமுள்ள கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்துள்ளது.
சேலம்:

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு உயர்தரமான சிகிச்சை அளிப்பதற்காக 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ கட்டிட வசதி உள்ளது.

அங்கு கடந்த மாதத்தில் மட்டும் 1,080 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்து குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் குறிப்பாக 477 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவமும், மீதமுள்ள கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை(சிசேரியன்) மூலம் குழந்தைகள் பிறந்து உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெளியூர்களில் இருந்து உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் கொண்டு வரப்பட்ட 2 கர்ப்பிணிகள் மட்டும் இறந்துள்ளனர். ஆனால் அவர்களது குழந்தைகளை மருத்துவ குழுவினர் காப்பாற்றி உள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் இந்த வேளையில், மகப்பேறு மருத்துவ துறை தலைவர் டாக்டர் சுபா தலைமையிலான மருத்துவக்குழுவினர் கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருவதால் அவர்களை மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், சூப்பிரண்டு தனபால் ஆகியோர் பாராட்டி உள்ளனர். 
Tags:    

Similar News