செய்திகள்
பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுடைய விவரங்களை பதிவு செய்தனர்.

நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் செல்ல ஆதார் எண் கட்டாயம்

Published On 2020-06-04 04:30 GMT   |   Update On 2020-06-04 07:46 GMT
நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் செல்ல ஆதார் எண் கட்டாயம் என்ற திடீர் கட்டுப்பாட்டால் பயணிகள் அவதியடைந்தனர்.
நெல்லை:

நெல்லையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் முதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் பஸ்சில் ஏறிய அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் நாகர்கோவில் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. நாகர்கோவில் செல்லக்கூடிய பயணிகள் அங்கு அதற்காக நியமிக்கப்பட்டுள்ள போக்குவரத்து ஊழியரிடம் தங்களுடைய ஆதார் கார்டு அல்லது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அதில் உள்ள எண்கள் மற்றும் செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொண்ட பிறகே அவர்கள் பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

இதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுடைய விவரங்களை பதிவு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்லும் பஸ்சில் 32 பயணிகள் மட்டுமே ஏற்றி அனுப்பப்படுகிறார்கள. சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்தே பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்சில் பயணம் செய்ய திடீரென ஆதார் கார்டு அல்லது அடையாள அட்டை கட்டாயம் தேவை என்று கூறியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

இதற்கு சில பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு கண்டக்டர், அடையாள அட்டை இருந்தால்தான் பஸ்சில் பயணிகளை ஏற்றி வர வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது என்று கூறினார்.
Tags:    

Similar News