செய்திகள்
திருப்பரங்குன்றம் கோவில் யானை

திருப்பரங்குன்றம் கோவில் யானை புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைப்பு

Published On 2020-06-01 09:05 GMT   |   Update On 2020-06-01 09:05 GMT
திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எம்.ஆர்.பாளையம் பகுதியில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானையை கடந்த ஞாயிற்றுக்கிழமை குளிக்க அழைத்து சென்றபோது திடீரென ஆவேசம் அடைந்து காளிதாஸ் என்ற பாகனை கொன்றது.

இதையடுத்து அந்த யானையை கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தினமும் யானைக்கு பிடித்தமான உணவுகள் வழங்கப்பட்டு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் யானை குளிப்பாட்டப்பட்டது.

இதனால் யானை நல்ல நிலையில் இருப்பதாகவும், பாகன்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகளின் பரிந்துரைப்படி திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எம்.ஆர்.பாளையம் பகுதியில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமுக்கு இன்று அதிகாலை லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News