செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Published On 2020-05-29 11:26 GMT   |   Update On 2020-05-29 11:26 GMT
நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:

அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பருவமழை ஜூன் 1-ந் தேதி தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் கேரளாவில் மழை பெய்தது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து 311 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று வரை நீர்வரத்து இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர்மட்டம் 112.60 அடியாக உள்ளது. 125 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 38.78 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.85 அடியாக உள்ளது. நீர் வரத்தும் திறப்பும் இலலை.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 62.64 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

மழை அளவு மி.மீ. வருமாறு:-

பெரியாறு 18.8, தேக்கடி 49, கூடலூர் 28, உத்தமபாளையம் 58.2, வீரபாண்டி 38, சோத்துப்பாறை 34, மஞ்சளாறு 23, ஆண்டிப்பட்டி 7, அரண்மனைபுதூர் 25.9, போடி 15.2, பெரியகுளம் 32, வைகை அணை 9.
Tags:    

Similar News