செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

ஜெயலலிதா நினைவு இல்லத்தில் முதல்வர் அலுவலகம் அமைய வாய்ப்பில்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2020-05-28 08:31 GMT   |   Update On 2020-05-28 08:31 GMT
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் முதல்வர் அலுவலகம் அமைக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை:

மதுரை காமராஜர்புரம், தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா நிவாரண உதவி பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுகாதார துறையின் பரிசீலனைகள் செயல்படுத்தப்பட்டு மக்களை காக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் புதுப்புது குறைகளை கூறி வருகிறார். ஏழை-எளிய மக்கள் பயன் அடையும் வகையில் ஜூன் மாதத்திற்குரிய பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் வினியோகம் செய்ய நாளை (29-ந் தேதி) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஆனாலும் 1½ கோடி தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் அவசர சட்டம் கொண்டு வந்துள்ளனர். இது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் முதல்வர் அலுவலகம் அமைக்க வாய்ப்பு இல்லை.

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை கோவில் ஆக்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணம். அந்த எண்ணத்தை அரசு நிறைவேற்றி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News