செய்திகள்
சிறுவாணி அணை

சிறுவாணி அணையின் வால்வை அடைக்கும் கேரள அரசு

Published On 2020-05-27 10:05 GMT   |   Update On 2020-05-27 10:05 GMT
சிறுவாணி அணையில் கோவைக்கு வரும் குடிநீரை அடைக்க கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 15 மீட்டர்.

அணையில் 4 வால்வுகள் உள்ளது. தற்போது 1.5 மீட்டர் அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கடைசி வால்வில் இருந்து குடிநீர் பெறப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கேரள அரசின் நீர்பாசன துறையினர் நீரேற்று நிலையம் பகுதியில் உள்ள பழங்கால தடுப்பணை மற்றும் அதற்கு அடியில் செல்லும் குகை நீர்பாதை பகுதியை அடைக்கும் பணியை மேற்கொண்டு உள்ளனர்.

நீர் குழாய் செல்லும் பகுதியை 300 மீட்டர் விட்டம் கொண்ட குழாயை தோண்டி அதனை அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனை அடைத்து விட்டால் 4-வது வால்வு வரை மட்டுமே குடிநீர் எடுக்க முடியும். நில மட்டத்துக்கு கீழ் உள்ள பழங்கால தடுப்பணையில் இருந்து குடிநீர் பெற முடியாது.

தற்போது ஊரடங்கு நேரத்தில் கேரள நீர்பாசன துறையினர் குடிநீர் குழாயை அடைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அணையின் பின்பக்க ‌ஷட்டர் வழியாக தண்ணீரை திறந்து விட்டனர்.

கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கேரள அரசு நீர் வெளியேற்றியதை நிறுத்தியது.

தற்போது கோவைக்கு வரும் குடிநீரை அடைக்க கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News