செய்திகள்
சிங்கம்பட்டி ஜமீன்

இணையத்தில் வலம்வரும் வைரல் வீடியோ சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதா?

Published On 2020-05-26 03:51 GMT   |   Update On 2020-05-26 03:51 GMT
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதா என தொடர்ந்து பார்ப்போம்.



சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ராஜாவாக சுதந்திரத்திற்கு முன்பு தனது 3½ வயதில் நல்லகுத்தி சிவசுப்பிரமணிய சங்கர முருகதாஸ் தீர்த்தபதி ராஜாவாக பொறுப்பேற்றார்.

முதுமை காரணமாக கடைசி ராஜாவான முருகதாஸ் தீர்த்தபதி நேற்று முன்தினம் (மே 24) இரவு 9.30 மணியளவில் மரணமடைந்தார். தமிழகத்தில் கடைசியாக முடி சூட்டப்பட்ட, சிங்கம்பட்டி குறுநில மன்னர், நல்லகுத்தி சிவசுப்பிரமணிய சங்கர முருகதாஸ் தீர்த்தபதியின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்று அவரது உடல் தாமிரபரணி நதிக் கரையில் தகனம் செய்யப்பட்டது.



இந்நிலையில், சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதாக கூறும் வீடியோ வாட்ஸ்அப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

நாட்டில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 'ஊரடங்கை பற்றி கவலை படாத மக்கள் கூட்டம்' எனும் தலைப்புகளில் வைரல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. 

வீடியோவை ஆய்வு செய்ததில், வைரல் வீடியோவில் ஆயிரக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதும் ஊர்வலத்தின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இணையத்தில் மேற்கொண்ட தேடலில், சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வல வீடியோ காணக்கிடைத்தது. 



ஜமீன் இறுதி ஊர்வல வீடியோவிற்கும் ஜமீன் இறுதி ஊர்வல வீடியோவிலும் அதிக வித்தியாசங்கள் இருப்பது தெளிவாக தெரிகிறது. அந்த வகையில், வைரல் வீடியோ சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News