செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பில் சிக்கல்

Published On 2020-05-19 07:51 GMT   |   Update On 2020-05-19 07:51 GMT
மழை கண்ணாமூச்சி காட்டி வருவதால் முதல் போக சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

கடந்த சில நாட்கள் மழை பெய்து முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் சீராக உயர்ந்தது. இதனால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படலாம் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

தற்போது 113.15 அடி நீர் மட்டம் உள்ளது. 28 கன அடி நீர் வருகிற நிலையில் 125 கன அடி நீர் குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டினால் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும்.

எனவே இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை கை கொடுத்தால் மட்டுமே ஜூன் மாதத்தில் தண்ணீர் பாசனத்துக்கு திறக்க முடியும். எனவே விவசாயிகள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

வைகை அணையின் நீர் மட்டம் 42.51 அடியாக உள்ளது. 8 கன அடி நீர் வருகிற நிலையில் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 36.65 அடி. நீர் வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 66.25 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
Tags:    

Similar News