செய்திகள்
விவசாய பணியில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள்

கண்ணமங்கலம் அருகே நாற்று நடும் பணிக்கு உதவிய சிறுவர்கள்

Published On 2020-04-29 10:06 GMT   |   Update On 2020-04-29 10:06 GMT
கண்ணமங்கலம் அருகே சிறுவர்கள் விவசாய பணிக்கு உதவியது இனி வரும் காலங்களிலும் விவசாயத்திற்கு அழிவு கிடையாது விவசாயத்தை காக்க நாங்கள் இருக்கிறோம் என்பதை பறைசாற்றுவது போல் உள்ளது.
கண்ணமங்கலம்:

ஊரடங்கினாலும், உழவுத்தொழிலுக்கு மட்டும் என்றும் அழிவில்லை என்பது விவசாயத்தின் பெருமை.

அதற்கேற்ப கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் பகுதியில் விவசாய நிலம் ஒன்றில் நாற்று நடும் பணி, சேடை ஓட்டும் பணிகளுக்கு இடையே குட்டி விவசாயிகளாக சிறுவர், சிறுமியர் தங்கள் தாத்தா, பாட்டிக்கு இணையாக சேற்றில் நடந்து நெல் நாற்றுகள் சேகரித்து கொண்டு சென்றனர்.

இவர்கள் சேகரித்து அனுப்பும் நாற்றுகளை பெண்கள் மூலம் நாற்று நடும் பணியும் நடந்தது.

சிறுவர்கள் விவசாய பணிக்கு உதவியது இனி வரும் காலங்களிலும் விவசாயத்திற்கு அழிவு கிடையாது விவசாயத்தை காக்க நாங்கள் இருக்கிறோம் என்பதை பறைசாற்றுவது போல் உள்ளது.
Tags:    

Similar News