செய்திகள்
மெட்ரோ ரெயில்

பராமரிப்பு சோதனைக்காக பயணிகள் இல்லாமல் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது

Published On 2020-04-02 10:05 GMT   |   Update On 2020-04-02 10:05 GMT
தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 2 மெட்ரோ ரெயில்கள் சோதனை செய்யப்படுகின்றன. இந்த சோதனையின் போது பயணிகள் யாருக்கும் அனுமதி இல்லை.
சென்னை:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மெட்ரோ ரெயில் சேவை கடந்த 24-ந்தேதி நிறுத்தப்பட்டது.

2 வழித்தடத்திலும் இயக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை நிறுத்தப்பட்டு நிலையங்கள் மூடப்பட்டன.

இந்த நிலையில் ஒரு சில மெட்ரோ ரெயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. காலையில் ஒரு ரெயிலும், மாலையில் ஒரு ரெயிலும் பயணிகள் இல்லாமல் இயக்கப்படுகிறது.

சென்ட்ரல்-கோயம்பேடு வழியாக விமான நிலையம், வண்ணாரப்பேட்டை- அண்ணாசாலை வழியாக விமானநிலையம் ஆகிய 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மெட்ரோ ரெயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மெட்ரோ ரெயில் சேவை கட்டமைப்புகளை தினமும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

தண்டவாளம், ரெயில் செயல்பாடு, கதவுகள் திறப்பு உள்ளிட்ட அனைத்து இயக்க பணிகளும் முறையாக செயல்படுகிறதா? என்பதை கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 2 மெட்ரோ ரெயில்கள் சோதனை செய்யப்படுகின்றன. இந்த சோதனையின் போது பயணிகள் யாருக்கும் அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News