செய்திகள்
பொள்ளாச்சியில் தெருநாய்களின் பசியை போக்கிய தீயணைப்பு வீரர்கள்

பொள்ளாச்சியில் தெருநாய்களின் பசியை போக்கிய தீயணைப்பு வீரர்கள்

Published On 2020-04-02 05:27 GMT   |   Update On 2020-04-02 05:27 GMT
பொள்ளாச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் தெருநாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி பசியை போக்கி வருகின்றனர்.
பொள்ளாச்சி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காய்கறி, மளிகை, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறந்து இருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. உணவகங்கள் மூடப்பட்டதால் ஆதரவற்றோருக்கு வருவாய் துறை மூலம் தினமும் உணவு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கடைகள் மூடப்பட்டதால் தெருநாய்களுக்கும் உணவு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பொள்ளாச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் தெருநாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி பசியை போக்கி வருகின்றனர்.

தெருநாய்களும் ஆர்வமுடன் பிஸ்கட்டை சாப்பிடுகின்றன. இதன் காரணமாக தினமும் தீயணைப்படை வீரர்கள் தங்கள் பகுதிக்கு வந்ததும் தெருநாய்கள் கூட்டமாக வந்து நிற்க தொடங்கி விட்டன. பாசத்தை காட்டும் விதமாக வாலை ஆட்டிக் கொண்டு தீயணைப்பு துறையினர் அருகில் வந்து நிற்பது நெகிழ வைக்கிறது.
Tags:    

Similar News