செய்திகள்
கோப்புபடம்

கொரோனா வைரஸ் பீதியால் தனிமைப்படுத்தப்பட்ட கிராமம் - பொதுமக்கள் வெளியே வர தடை

Published On 2020-04-01 09:11 GMT   |   Update On 2020-04-01 09:11 GMT
கொரோனா வைரஸ் பீதியால் தனிமைப்படுத்தப்பட்ட அரூர் கிராமத்தில் இருந்து பொதுமக்கள் வெளியே வர அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
அரூர்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அரூர் அருகே, தனிமைப்படுத்தப்பட்ட கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில, மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் வேலை செய்து வந்த, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமடுவு கிராமத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் இருசக்கர மற்றும் ஆட்டோக்கள் மூலம், கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், சொந்த ஊருக்கு திரும்பியதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அரூர் சப்கலெக்டர் பிரதாப், எம்.எல்.ஏ., சம்பத்குமார் வருவாய் மற்றும் சுகாதார துறையினர் நேற்று கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, அனைத்து வீடுகளிலும் தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. கொரோனா வைரஸ், அது பரவும் விதம், சமூக இடைவெளி, அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விளக்கிய சப்கலெக்டர் பிரதாப், யாரும் வெளியில் செல்லக்கூடாது எனவும், வெளியாட்கள் யாரும் கிராமத்திற்குள் வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கவும், நடமாடும் காய்கறி கடை வந்து செல்வதற்கும், மருத்துவக்குழுக்கள் அமைக்கவும் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News