செய்திகள்
தமிழக அரசு

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை- அரசாணை வெளியீடு

Published On 2020-04-01 05:12 GMT   |   Update On 2020-04-01 05:12 GMT
ரேஷன் கடை விற்பனையாளர்களையும், பாக்கெட் கட்டுகிறவர்களையும் ஊக்குவிப்பதற்காக, விற்பனையாளர்களுக்கு ரூ.2,500-ம், பாக்கெட் கட்டுவோருக்கு ரூ.2 ஆயிரமும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை:

தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு பொருட்களை வழங்க ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள், அலுவலக வேலை நேரத்தைத் தாண்டியும், விடுமுறை நாளிலும் பணியாற்றுகிறார்கள்.

மேலும், நிவாரணத் தொகையாக ஆயிரம் ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவக்கூடிய சூழ்நிலையில் உயிரை பணயம் வைத்து அரசு உத்தரவை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர்களையும், பாக்கெட் கட்டுகிறவர்களையும் ஊக்குவிப்பதற்காக, விற்பனையாளர்களுக்கு ரூ.2,500-ம், பாக்கெட் கட்டுவோருக்கு ரூ.2 ஆயிரமும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News