செய்திகள்
தாணிப்பாறை மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ

தாணிப்பாறை மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ

Published On 2020-04-01 03:02 GMT   |   Update On 2020-04-01 03:02 GMT
பட்டிவீரன்பட்டி அருகே தாணிப்பாறை மலையில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் வனவிலங்குகள், பறவையினங்கள் பாதிப்படைந்து உள்ளன.
பட்டிவீரன்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணைக்கு மேல்பகுதியில் உள்ள தாணிப்பாறை மலை பகுதியில் முதல் காட்டுத்தீ பற்றி எரிகிறது.

போக்குவரத்து வசதி இல்லாததால் வனத்துறை பணியாளர்கள் தீ எரியும் பகுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நவீன சாதனங்கள் இல்லாத நிலையில் குறைவான எண்ணிக்கையிலான வனக்காவலர்கள் பச்சையாக உள்ள மரங்களை வெட்டிப்போட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடைய தீ கட்டுக்குள் அடங்காமல் வனப்பகுதியில் கொழுந்து விட்டு எரிகிறது. இந்த காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் வனவிலங்குகள், பறவையினங்கள் பாதிப்படைந்து உள்ளன. எனவே வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News